Aran Sei

அரசு பள்ளிச் சுவரில் அம்பேத்கர் வாசகம் – கொதித்தெழுந்த பிராமண இயக்கங்கள் – இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்

த்தர பிரதேசத்தில் பள்ளிச் சுவரில் பிராமண விரோத கருத்துக்களை எழுதியதாக கூறி, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகுலையும், ஆசிரியர் காதிர் கானையும் ஆரம்ப கல்வி நிலைய அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளதாக இந்தியா.காம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம், லலித்பூரில், அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிச் சுவரில் “பள்ளியில் அடிக்கும் மணி உன்னை முன்னேற்றும், கோயிலில் அடிக்கும் மணி பிராமணர்களை மட்டுமே முன்னேற்றும்” எனும் வாசகம் எழுதப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பள்ளியில் நடந்த ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழாவின் போது, சுவரில் இருக்கும் இந்த வாசகங்களை சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து, இந்த வாசகம் சாதி மோதலை உருவாக்குகிறது எனவும், பிராமணர்களை இழிவுப்படுத்துகிறது எனவும் பிராமண அமைப்புகள் இதற்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை

உத்தர பிரதேச அரசாங்கம், இந்த வாசகங்கள் பள்ளிச் சுவரில் இடம் பெற்றிருப்பதற்கு காரணமானவர்களை பள்ளியிலிருந்து நீக்காவிட்டால், பெரும் போராட்டம் வெடிக்கும் என, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP), இந்து யுவா வாகினி, அகில இந்திய பிராமண மகாசபை, பிராமண மகாசங்கம், பரசுராம் சேனா, கர்ணி சேனா ஆகிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் – மரியாதை செலுத்திய தலைவர்கள்

பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகுல், இந்த வாசகம் தன்னுடையது அல்ல என்றும், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கருடையது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அம்பேத்கர், தலித் சமுதாயத்துக்கு கூறிய வாசகத்தை தான், பள்ளிச் சுவரில் எழுதியதாக அவர் கூறியுள்ளதாக இந்தியா.காம் தெரிவித்துள்ளது.

அம்பேத்கரின் மனுதர்ம எரிப்பு மாநாடு – அழைப்பிதழின் நகல்

இருந்தபோதும், பிராமண அமைப்புகளிம் கடும் எதிர்ப்பையடுத்து, வாசகம் இடம் பெற்றிருந்த சுவர் வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகுல் மற்றும் ஆசிரியர் காதிர் கான் உத்தரபிரதே அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா.காம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிச் சுவரில் அம்பேத்கர் வாசகம் – கொதித்தெழுந்த பிராமண இயக்கங்கள் – இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்