Aran Sei

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு – வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

credits : pti

உச்ச நீதிமன்றத்தின், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிப்பதற்காக வழக்கை, உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக, நீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர் புகாரளித்திருந்தார். அந்த பெண் முன் வைத்த குற்றசாட்டுகளை முற்றிலுமாக மறுத்திருந்த ரஞ்சன் கோகாய், இந்த குற்றச்சாட்டு, நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் சதி என தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே (தற்போதைய தலைமை நீதிபதி) தலைமையில், நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய குழு ஒன்று அமைக்கபட்டது. விதிமுறைகளின் அடிப்படையில் மறைமுகமாக விசாரணை நடத்திய இந்தக் குழு, ரஞ்சன் கோகாய் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்ற முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, ரஞ்சன் கோகாய் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதி திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

நீங்கள் கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம் – சாமானியர் நீதிமன்றம் சென்றால் வருத்தம் தான் அடைவர் – முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்நிலையில், இன்றைய தினம் (பிப்ரவரி 18) , 2019 ஆம் பதிவு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறிது விசாரித்த, தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியதை நீதிபதிகள் மேற்கொள் காட்டியதாக தி இந்து செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதிகள் மீது வேண்டுமென்றே பாலியல் குற்றம் சாட்டப்படுகிறதா?

மேலும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து விசாரிக்க, ஒய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு, இரண்டு ஆண்டுகளை கடந்தும் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால், வழக்கை தொடர்வதில் எந்த பலனும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

முன்னாள் தலைமை நீதிபதி கோகாய், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) தயாரிப்பது தொடர்பான, சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்ததால், அவருக்கெதிராக சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று, உளவுத்துறை இயக்குநர் அளித்த கடிதத்தை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இதை நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளது என தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் வழியே தான் சாதி ஒழியும்: படித்த இளைஞர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள் – உச்ச நீதிமன்றம்

இதையடுத்து, சதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக தானாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட வழக்கை, சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முடித்து வைத்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அவரே விசாரித்ததை, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு – வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்