Aran Sei

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீதேறி இந்தியாவுக்கு வந்து போனார் – கர்நாடகாவின் 8-ம் வகுப்பு பாடப்புத்தக தகவலால் சர்ச்சை

கர்நாடகாவில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் தினந்தோறும் ஒரு புல்புல் பறவை மீது அமர்ந்து சிறையிலிருந்து வெளியேறி இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆங்கிலேயர்களால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால் தான் விடுவிக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில், சாவர்க்கரை மிகப்பெரும் சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிதாக செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளி மாணவ மாணவிகளும் இதை படித்துப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

அதாவது ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கர்நாடக பாஜ அரசு அமைத்த பாடத்திட்ட குழு, ‘காலத்தை வென்றவர்கள்’ என்கிற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது.

அதில் அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் தினந்தோறும் பறவை மீது அமர்ந்து அறையில் இருந்து வெளியேறி இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தகவல் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு கட்டுக்கதையை மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பது? என தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Source : NDTV

பாஜகவை நக்கல் பண்றிங்களா? | சன் டிவி செய்தியாளரால் கடுப்பான H. Raja | Aransei Roast | BJP | suntv

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீதேறி இந்தியாவுக்கு வந்து போனார் – கர்நாடகாவின் 8-ம் வகுப்பு பாடப்புத்தக தகவலால் சர்ச்சை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்