இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம் வருகின்ற மே25 ஆம் தேதி நாடுதழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை பகுஜன் முக்தி கட்சியின் சஹாரன்பூர் மாவட்டத் தலைவர் நீரஜ் திமான் தெரிவித்துள்ளார்.
சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கோரிக்கைக்கையோடு மட்டுமன்றி தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் துறைகளில் பட்டியல் சமூகம், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம், பகுஜன் முக்தி கட்சி உள்ளிட்டோர் நாடுதழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பை மக்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பகுஜன் முக்தி கட்சியின் செயல் தலைவர் டி.பி. சிங் கேட்டுக்கொண்டுள்ளார். முழு அடைப்பிற்கு பகுஜன் கிரந்தி மோர்ச்சாவின் தேசிய அமைப்பாளர் வாமன் மேஷ்ராம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாரதிய யுவ மோர்ச்சாவின் தேசிய அமைப்பாளரின் கூற்றுப்படி, அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:
- தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்
- சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு
- தனியார் துறையில் SC/ST/OBC இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்
- தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), செயல்படுத்தக்கூடாது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
- ஒடிசா மற்றும் மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி வேண்டும்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தக் கூடாது.
- தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயபடுத்தக் கூடாது.
- கொரோனா ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
Source: The Indian Express
கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.