Aran Sei

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் – ஜேஎன்யு துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

ந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.

குல்பர்கா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தேசியம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு: சிக்கல்கள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான அரசியல் அறிவியல் ஆசிரியர் மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் சாந்திஸ்ரீ, சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்குவது நன்மை பயக்கும் என்று சமஸ்கிருதம் அறிவின் நீரூற்று என்றும் கூறியுள்ளார்.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனு – ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய அவர், அவர் அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக வாதிட்டார் என்றும், டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பின் காரணமாக, நாடு இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றும் பல அம்சங்களில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

பாலின பாகுபாடு நிலவுவது குறித்து அவர்  வருத்தம் தெரிவித்துள்ளார். “பெண்களுக்கான வசதிகளை வழங்குவதில் நமது நாடு 146 நாடுகளில் 143வது இடத்தில் உள்ளது. ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த விஷயத்தில் இந்தியாவுக்குக் கீழே உள்ளன. நாம் ஸ்ரீ ராமரை சீதாபதி என்றும், விஷ்ணுவை லக்ஷ்மிபதி என்றும் அழைக்கிறோம், இது நம்மிடம் பெண்ணிய நாகரீகம் இருப்பதைக் காட்டுகிறது” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.

Source: newindianexpress

PTR Palanivel Thiagarajan has exposed BJP – Dr Sharmila | PTR on Tv Debate | PTR vs Annamalai | BJP

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் – ஜேஎன்யு துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்