தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே சுஷில் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது, “தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை ஏற்க இந்திய சமூகம் தயாராக இல்லை என்றும் அது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தன்பாலின ஈர்ப்பு திருமணம் பொருத்தமற்றது. ஆனால் சில இடதுசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தன்பாலின ஈர்ப்பு திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குமாறு கேட்டுக்கொண்டனர். இரண்டு நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இது முதலில் நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்பட வேண்டும். மேலும் எந்த மதமாய் இருந்தாலும் அனைத்து பெண்களின் திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வார் கூறியுள்ளார்.
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய இரண்டு மனுக்களுக்குப் பதிலளிக்க 2023 ஜனவரி 6 ஆம் தேதி வரை அரசுக்குஉச்ச நீதிமன்றம் கடைசியாக அவகாசம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : india today
‘வாட்ச்’க்கு பில் இருக்கா இல்லையா? | ஆட்டுக்குட்டியை கலாய்த்த செந்தில் பாலாஜி | Aransei Roast | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.