Aran Sei

சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 40 ஆண்டுகளுக்கு பின்பு தங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் காளகஸ்தீஷ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த 1974 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வந்தாலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

பழனி: கோயில் நுழைவு மறுக்கப்படுவதாக பட்டியல் சமூக மக்கள் குற்றச்சாட்டு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இதனால் வடகுமரை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தினர் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஆறகளூர், தேவியாக்குறிச்சி, தென்பொன்பரப்பி, ஆத்தூர் உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்த வழிபாட்டு உரிமையை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கடந்த டிசம்பரில் கோவில் நுழைவு போராட்டம் அறிவித்தனர்.

இதையடுத்து மற்றொரு தரப்பினர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தது தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியதால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க கோவில் நிலங்கள் தங்களுக்குத்தான் சொந்தம் என தனிநபர் (கந்தசாமி) என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பட்டியலின மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது.

விழுப்புரம்: இறந்தவரின் உடலைப் புதைக்க இடம் தர மறுத்த ஆதிக்கச் சாதியினர் – 3 நாட்களாக போராடி உடலைப் புதைத்த பட்டியலின மக்கள்

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலய நுழைவு போராட்டத்தை அறிவித்தார். இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியதால் ஆலய நுழைவு போராட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது. மேலும் கோவில் நிலங்கள் நிர்வாகம் ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில் தக்கரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் சரண்யா முன்னிலையில் தங்களது வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியலின மக்கள் காளகதீஷ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source : puthiya thalaimurai

Kallakurichi Case Latest Update | Kallakurichi Sakthi School is behind Karthik Pillai – Balabharathi

சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்