மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவை அவர் பணியாற்றிய கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளதை திரும்பப்பெற வேண்டுமென டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா: பணிநீக்கம் செய்த கல்லூரி
2003 ஆம் ஆண்டு முதல் டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு சாய்பாபா உட்பட ஐந்து பேருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகள் இருக்கிறது என்றும், நாட்டிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா நோய்த்தொற்று : அவரை பராமரிப்பது பற்றி மனைவி கேள்வி
இந்நிலையில், சாய்பாபாவின் மனைவி வசந்தாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “2021 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி மதியம் முதல், உதவி பேராசிரியர் டாக்டர் ஜி.என். சாய்பாபா, ராம் லால் ஆனந்த் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார்.” என்று கல்லூரி முதல்வரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்
இந்தப் பணி நீக்க நடவடிக்கைகுறித்து தெரிவித்துள்ள டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், “பேராசிரியர் சாய்பாபா மீதான வழக்கு நிலுவையில் உள்ளது, இன்னும் அவர்மீதான வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை எனவே சாய்பாபா மீதான பணி நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.