செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நட்த்தியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, பாஜகவும் அதன் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசியக் கொடியை அவமதித்துவிட்டன. காங்கிரஸ் இதனைக் கண்டித்து இரவு, பகலாக சட்டப்பேரவையில் போராட முடிவு செய்துள்ளது.
ஈஸ்வரப்பா பேச்சுக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஈஸ்வரப்பாவை தகுதி நீக்கம் செய்யச் சொல்லியிருக்க வேண்டும். முதல்வரும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் ஈஸ்வரப்பா மூலம் தனது கொள்கைகளை மறைமுகமாக ஈஸ்வரப்பா மூலம் பேரவையில் புகுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
“நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நான் ஒரு தேசபக்தர். நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நான் சிறை சென்று வந்தவன். அவர்கள் போராடட்டும். அதற்கெல்லாம் நான் அசைந்துகொடுக்க மாட்டேன். மூவர்ணக் கொடி நமது தேசியக் கொடி அதை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும்” என்று ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக ஈஸ்வரப்பா, ஒருநாள் செங்கோட்டையில் காவிக் கொடி தேசியக் கொடியாக ஏற்றப்படும் என்று பேசியிருந்தார். இதனை எதிர்த்தே காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் செய்துள்ளனர்.
ஈஸ்வரப்பாவுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆதரவுக் தெரிவித்துள்ளார். ஈஸ்வரப்பாவுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டப்பேரவை நிராகரித்தது. ஈஸ்வரப்பாவை நீக்கி அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.