Aran Sei

காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் – பாஜக அமைச்சர் எச்சரிக்கை

ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தின் பாடல் காட்சியில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மத்தியபிரதசத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்வோம் என்று பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள்கள் சர்க்கரைகளாக மாறிவிடும்’- மகாராஷ்டிரா அமைச்சர்

இந்தப் படம் வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் அவர் அணிந்துள்ள உடை காவி நிறத்தில் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘கான் என்ற பெயருக்காக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் குறிவைக்கப்பட்டுள்ளார்’ – மக்கள் தேசிய கட்சி தலைவர் மெகபூபா முப்தி

இது தொடர்பாக பேசிய அவர், ‘பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source : india today

Approach of Courts in the four Cases | Bilkis Bano | Yashwant Shinde | Lakhimpur kheri | Umar Khalid

காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் – பாஜக அமைச்சர் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்