Aran Sei

மெட்டா நிறுவனத்தில் அதிக விளம்பரங்கள் செய்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் சத்குரு முதலிடம் – நாளொன்றுக்கு ரூ. 1.35 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல்

Credit: Business Insider.in

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அதிக அளவில் விளம்பரங்கள் செய்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் சத்ருகு ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரின் லாபகோக்கமற்ற அமைப்பான ஈஷா ஆட்ரீச் அமைப்பு முதலிடம்.

ஏப்ரல் 27 முதல் ஜூலை 25 வரையிலான காலகட்டத்தில் நாளொன்றுக்கு ரூ. 1.35 லட்சம் வீதம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனமான பைரட் டெக்னாலஜிஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சத்குரு மற்றும் ஈஷா அவுட்ரீச்சின் கான்சியஸ் பிளானட் சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக மெட்டா தளங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளனர். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் செய்ய மொத்தம் 1.20 கோடி செலவிட்டுள்ளனர்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: செய்தி ஆசிரியரை தேசிய புலனாய்வு முகமை துன்புறுத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

இரண்டாவது இடத்தில் சமூக வலைதளமான கூ ஊடகம் உள்ளது. அவர்கள் 90 நாட்களில் ரூ. 87 லட்சம் செலவிட்டுள்ளது. மேலும், மூன்றாவது இடத்தை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஓடிடி இணையதளமான வூட் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் விளம்பரங்களுக்காக ரூ. 67 லட்சம் செலவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் குஜராத் மாநில பாஜக ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் விளம்பர விதிகளின்படி, அனைத்து இந்திய பிராண்டுகளும் சமூக காரணங்களின் வகையின் கீழ் வராததால், தங்கள் செலவினங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மற்றொரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான நெப்போலியன் கேட், ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 25 க்கு இடையில், மெட்டா நிறுவனம் இந்தியாவில் 12,863 விளம்பரதாரர்களை பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனம் ₹13.94 கோடிகளை வசூலித்துள்ளது.

ஜூலை 2002 தேதி நிலவரத்தின்படி, ஃபேஸ்புக்கில் 51.58 கோடி இந்தியர்கள் பயனாளர்களாக உள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 56 விழுக்காடு ஆகும். இந்தியாவில் வளர்ந்து வரும் விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கையால், இந்தியா பேஸ்புக்கின் சிறந்த சந்தையாக மாறியுள்ளது.

Source: BusinessInsider

Kallakurichi Sakthi School | சங்கிகளை காப்பாற்றும் காவல்துறை | Advocate Raju Interview | Aransei

 

மெட்டா நிறுவனத்தில் அதிக விளம்பரங்கள் செய்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் சத்குரு முதலிடம் – நாளொன்றுக்கு ரூ. 1.35 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்