Aran Sei

‘ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு இந்திய அரசே காரணம்’ – அமெரிக்க அரசின் மத சுதந்திரத் துறை குற்றச்சாட்டு

ரோக்கியமான ஜனநாயகத்தை  உறுதிபடுத்த மனிதஉரிமை  செயல்பாட்டாளர்களின்  செயல்பாடுகளுக்கு அனைத்து  அரசுகளும் உரிய  மதிப்பளிக்க  வேண்டுமென  ஸ்டான் சுவாமியின் மரணம்  குறித்து  அமெரிக்க அரசின்  பன்னாட்டு  மத சுதந்திரத்திற்கானத்  துறை  தெரிவித்துள்ளதாக  தி  இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

அகில் கோகோய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக என்.ஐ.ஏ மேல்முறையீடு – கேள்விக்குறியாகிறதா நீதி?

இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”இந்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு காவலிலேயே மரணமடைந்துள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர்  அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு வருந்துகிறோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தை  உறுதிபடுத்த   மனிதஉரிமை  செயல்பாட்டாளர்களின்  செயல்பாடுகளுக்கு அனைத்து  அரசுகளும் உரிய  மதிப்பளிக்க  வேண்டும்”  என்று  பதிவிட்டுள்ளதாகவும்  அந்த  செய்தி  கூறுகிறது.

மேலும், அவ்வமைப்பு  ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு கண்டனம்  தெரிவித்து பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், “நீண்ட நாட்களாக மனிதஉரிமைகளுக்காக செயல்பட்டு வந்த 84 வயதுடைய அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் இறப்பிற்கு, இந்திய அரசின் குறிவைத்தத்  திட்டமிட்ட  புறக்கணிப்பே காரணம் அதற்குப் பன்னாட்டு  மத சுதந்திரத்திற்கானத்  துறை தனது கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது”  என்றும்  கூறியிருந்தது.

அதுமட்டுமின்றி, போதிய ஆதாரங்கள் இன்றியும், உலகெங்கிலும் அவரை  விடுவிக்கக்கோரி  கோரிக்கை எழுப்பட்ட நிலையிலும், அவரது  உடல்  நிலையையும்  கருத்தில்  கொள்ளாது   இந்திய அரசு  திட்டமிட்டு அருட்தந்தை  ஸ்டான் சுவாமியை காவலில் வைத்தது  என்று  மற்றொரு பதிவில் அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது.

 

‘ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு இந்திய அரசே காரணம்’ – அமெரிக்க அரசின் மத சுதந்திரத் துறை குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்