கோவை மாநகராட்சி பள்ளியில் அனுமதியின்றி ஆர்எஸ்எஸ் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம், தேவங்கா மேல்நிலைப் பள்ளி சாலையில், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பயிற்சி நடந்தததாக தகவல் வெளியானது.
இதுதொடர்பான காணொளி ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. உடனடியாக காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
“காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் நாம் இன்று போராடுகிறோம்” – கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு
முதல்கட்ட விசாரணையில் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு மாநகராட்சி அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மாநகராட்சி பள்ளியிலேயே சட்டவிரோதமாக ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. பல மாதங்களாக இது தொடர்ந்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பயிற்சி அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகிறார். விசாரணைக்கு பின்னர் உரிய முடிவு செய்யப்படும். பயிற்சி அளிப்பதற்கு எந்த அனுமதியும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.” என்று கூறியுள்ளார்.
Tamilnadu Police tweet in favour of RSS | Rss Rally in Tamilnadu | MK Stalin | Deva’s Update 37
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.