ஆர்எஸ்எஸ் அமைப்பை உயர் சாதியினரின் சங்கம் என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தை நாடகம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நாடகக்காரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர், தேசியக் கொடி, கீதம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் எதிர்த்ததாக குற்றம் சாட்டினார். “அவர்கள் எப்படி தேசபக்தர்களாக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்
“நான் ஆரம்பத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து வருகிறேன், அது உயர் சாதியினரின் சங்கம், அதனால்தான் அவர்கள் சதுர்வர்ண அமைப்பை (சாதி அமைப்பு) நம்புகிறார்கள். சதுர்வர்ண அமைப்பு உயர் சாதியினரின் மேலாதிக்கத்தை நம்புகிறது; அந்த அமைப்பு தொடர்ந்தால், சமத்துவமின்மை சுரண்டலுக்கு வழிவகுக்கும்,” என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து மகாசபா, இந்து ஜாகரன வேதிகே, பஜ்ரங்தள் உள்ளிட்ட அனைத்து சங்க பரிவார் அமைப்புகளும் சாதி அமைப்பு சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தை நாடகம் என்று அழைத்த அவர், “அவர்களின் (பாஜக) சித்தாந்தத் தலைவர்களான வி.டி. சாவர்க்கர், எம்.எஸ். கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசர் ஆகியோர் நாட்டின் மூவர்ணக் கொடியை எதிர்த்தனர். நாம் அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் கடந்த 52 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திர இந்தியாவிற்கு காங்கிரஸும் அதன் தலைவர்களும் தான் காரணம் என்று கூறிய அவர், சிறையில் இருந்து விடுவிக்க ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய சவரக்கர், அவரை “வீர் சாவர்க்கர்” என்று அழைக்கிறார்கள் என்று பகடி செய்துள்ளார்.
“கோல்வால்கர், ஹெட்கேவார் (ஆர்எஸ்எஸ் தலைவர்கள்) இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்களா? சிறைக்குச் சென்றிருப்பார்களா? அல்லது அதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருப்பார்களா?… பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர இந்தியாவில் பிறந்தார், நான் சுதந்திரத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தேன்; ஆனால் அவர்கள், தேசபக்தி மற்றும் சுதந்திரம் பற்றி எங்களுக்கு போதிக்கிறார்கள், ”என்று சித்தாராமையா சாடியுள்ளார்
பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு முழுமையான நாடகம், மோடி ஒரு சிறந்த நாடகக்காரர்.. இந்த போலி தேசபக்தர்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும், காங்கிரஸிடம் மட்டுமே தார்மீகம் உள்ளது.
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தின் “உண்மையான வாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசாங்கம் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாகவும், தேசியக் கொடி மற்றும் கீதத்தை அவமதிப்பதாகவும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Source: indianexpress
Kallakurichi Sakthi School Accused are about to get bail – Pasumpon Pandian Interview | New CCTV Pic
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.