Aran Sei

சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி, யாரும் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி – ஒன்றிய அரசின் பாரபட்சம்

மிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி ஒதுக்கி இருக்கும் ஒன்றிய அரசு, யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,487.9 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநிலங்களில் இயங்கி வரும் வங்கிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக புகார் உள்ளது.

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க, ஒரே மொழி, அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழியை பாஜக திணிக்கிறது – வைகோ கண்டனம்

அண்மையில் ஒன்றிய அரசு வாரணாசியில் நடத்திய காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் சமஸ்கிருதத்தை தமிழர்கள் மத்தியில் திணிக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. திராவிட கழகம், தமிழ் அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அதேபோல் சமஸ்கிருதத்தை வளர்க்கும் வகையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. அதேபோல் அனைத்து பிராந்திய மொழிகளை வளர்க்கும் வகையிலும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் மற்ற மொழிகளை விட சமஸ்கிருதம், இந்தி மொழிகளை வளர்க்க ஒன்றிய அரசு கூடுதல் நிதியை செலவிட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் – ஜேஎன்யு துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழை விட மக்களிடம் பேச்சு புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு பன்மடங்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார், கரூர் எம்பி ஜோதிமணிக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 2014 – 2015 கல்வியாண்டு முதல் கடந்த 2021 – 2022 கல்வியாண்டு வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விபரங்கள் இடம்பெற்று உள்ளன.

சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி – இஸ்ரோ தலைவர் கருத்து

அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் மத்திய அரசு ரூ.74.1 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து இருக்கிறது. ஆனால், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,487.9 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே பேசப்பட்டு வரும் தமிழை விட வழக்கொழிந்த சமஸ்கிருதத்துக்கு பல மடங்கு அதிகமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி வந்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

லட்சுமி ராமகிருஷ்ணனின் சனாதனம் | அக்ரஹாரத்தை அலற விடும் திருமா | Aransei Roast | VCK | Thiruma

சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி, யாரும் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி – ஒன்றிய அரசின் பாரபட்சம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்