ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஏற்கனவே இந்த வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை நிதி முறைகேடு வழக்கில் சிபிஐ கைது நேற்று (டிசம்பர் 25) கைது செய்துள்ளது.
2012ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவாக இருந்த சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளார். இந்த கடன் பரிவர்த்தனை மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சர் மற்றும் உறவினர்கள் பெருமளவில் நிதி ஆதாயம் பெற்றது 2018 ஆம் ஆண்டில் அம்பலமானது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2018 அக்டோபர் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமை பொறுப்பிலிருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் 2019ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் முக்கிய நகர்வாக குற்றச்சாட்டுக்கு ஆளான பிரதான புள்ளிகளை சிபிஐ அடுத்தடுத்து கைது செய்துள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Source : the hindu
பெரியாரை சாதிக்குள் அடைக்கும் சீமானின் சதி | Seeman | Periyar | NTK | Dravidam | U2brutus
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.