2021 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு ரூ. 2,000 நோட்டுகள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட ரூ.20.39 கோடி கள்ள நோட்டுகளில் ரூ.12.18 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்படி பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பாஜக அரசினால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கள்ள நோட்டுகளை ஒழிப்பது என்று பாஜக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் கள்ள நோட்டுகள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.
2016 ஆம் ஆண்டில், ரூ.15.92 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் ரூ.20.39 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு ரூ.5.48 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டில் ரூ.6.6 கோடி மதிப்பிலான ரூ.500 கள்ள நோட்டுகளும், ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூ.200 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ரூ.2,000 கள்ள நோட்டுகளும், கேரளாவில் ரூ.1.8 கோடி மதிப்பிலான ரூ.2,000 கள்ள நோட்டுகளும், ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான ரூ.2,000 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Source : the hindu
Kallakurichi Accusedக்கு இதனால்தான் Bail தரப்பட்டத | Kallakurichi Case Latest update | Jipmer Report
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.