பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என உத்தரபிரதேச பாஜக நிர்வாகியான மனுபால் பன்சால் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் (மோடி) வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை அமைச்சருமான (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
அப்போது அங்கு பேசிய பாஜக உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், ‘பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன்’ என்று அதிரடியாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Source : indiatv
Supreme Court dismisses Bilkis Bano Review Petition | Gujarat | BJP | Tahil Ramani | Haseef | Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.