Aran Sei

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “வங்கிகள் தங்கள் இருப்புநிலை ஏட்டை சரிசெய்யும் விதமாகவும், வரிப்பயனை பெறும் வகையிலும், முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும் தங்களின் வழக்கமான நடவடிக்கையின் ஒரு அங்கமாக வாராக்கடன்களை தள்ளுபடி செய்கின்றன. வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்த கொள்கை அடிப்படையிலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படியும் இது மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதன்படி, ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் தகவல்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக்கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளன. வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவற்றை திரும்ப வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கை போன்றவை தொடரும்.

வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி வாராக்கடன்கள் உள்பட ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 596 கோடி கடன்களை மீட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலாவின் வெங்காய வெறுப்பு | ஒட்ட நறுக்கிய தமிழக எம்.பிக்கள் | Aransei Roast | Nirmala Sitharaman

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்