Aran Sei

ராகெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தில் நம்பி நாராயணனின் பங்களிப்புகள் மிகைப்படுத்தப்பட்டது, ஆதாரமற்றது – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு

ம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தில் இந்திய விண்வெளித் திட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகள், குறிப்பாக கிரையோஜெனிக் எஞ்சின் தொடர்பாக ஆதாரமற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை கூறுவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானிகள் ஏ.இ. முத்துநாயகம் உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஆதாரமற்ற தகவல்களை கூறி, பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கிறது என்று இஸ்ரோ உளவு வழக்கில் தொடர்புடைய டி. சசிகுமாரன் உள்ளிட்ட முன்னாள் விஞ்ஞானிகள் நேற்று (ஆகஸ்ட் 25) திருவனந்தபுரம் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

நம்பி நாராயணன் மீது தனிப்பட்ட விரோதம் எங்களுக்கில்லை.ஆனாலும் பொதுமக்களின் முன்பு உண்மைகளை முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இஸ்ரோவின் வெற்றிகள் அனைத்தும் கூட்டு உழைப்பின் பலனாகும். அதனை எந்தவொரு தனிநபரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கு – போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

1994 ஆம் ஆண்டில் திரு நாராயணன் திரவ உந்து அமைப்புகள் மையத்திலிருந்து (Liquid Propulsion Systems Centre) விலகிய பின்னர் கிரையோஜெனிக் உந்துவிசையில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டது என்று கிரையோஜெனிக் மேல்நிலை திட்டத்தின் திட்ட மேலாண்மை வாரியத்திற்குத் தலைமை தாங்கிய டாக்டர் முத்துநாயகம் மற்றும் ஈ.வி.எஸ். நம்பூதிரி தெரிவித்துள்ளனர்.

1980 – களின் நடுப்பகுதியில் கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சியைப் பரிந்துரைத்த ஆய்வுத் திட்டத்தில் நம்பி நாராயணன் உறுப்பினராகவும் இல்லை, அதற்கு அவர் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. 1987ஆம் ஆண்டு கலாநிதி முத்து நாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் உந்துவிசை வளர்ச்சி குழுவில் நம்பி நாராயணன் இடம்பெறவும் இல்லை என்று கலாநிதி முத்துநாயகம் தெரிவித்துள்ளார்.

Source : the hindu

Kallakurichi Sakthi School management in girl student issue | Gowthama sanna | Ravikumar | Shanthi

ராகெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தில் நம்பி நாராயணனின் பங்களிப்புகள் மிகைப்படுத்தப்பட்டது, ஆதாரமற்றது – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்