பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95% ஆக கடுமையாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட், ”பணவீக்கம் பற்றிய விவாதம் பெரும்பாலும் எரிபொருள் விலையை மையமாகக் கொண்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நுகர்வோர் விலைக் குறியீட்டை நீங்கள் கண்காணித்தால், பட்டியலில் உள்ள 299 பொருட்களில் 235 பொருட்கள் கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோலை விட அதிக விழுக்காடு விலை உயர்வைக் கண்டுள்ளன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 2014 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில், பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகள் பெட்ரோலை விட அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு 71% அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
விலைகள் அதிகரித்து வரும் நேரத்தில், நிலையான வைப்புத்தொகை மற்றும் பிற சேமிப்புக் கருவிகளின் வட்டி விகிதங்களை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதன்மூலம். சாமானியர்களின் சேமிப்பை ஒன்றிய அரசு சூறையாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முன் நாம் எழுப்ப இரண்டு கேள்விகள் மட்டுமே உள்ளன. விலைவாசியைக் கட்டுப்படுத்த அவர்களின் உத்தி என்ன? 84% மக்களின் வருமானம் குறைந்து வரும் நேரத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. 15 கோடி ஏழைக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தை பாதியாகக் குறைத்துள்ளன. இந்த அரசாங்கத்திற்கு நன்றி. மேலும், அரசாங்கம் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு சமர்ப்பிக்க வேண்டும்” என்று காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் கூறியுள்ளார்.
Dalit Youth Vignesh Issue | மிச்சமிருக்கும் இன்னொரு உயிரையேனும் கப்பாற்றுங்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.