சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஆறு வாரங்களாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. 2020 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 50 விழுக்காடு உயர்ந்திருக்கும் கச்சா எண்ணெய் விலை, இரு தினங்களுக்கு முன்பு பேரலுக்கு 63 அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில், கடந்த ஆண்டு முழுவதும் மொத்தமாக 15 ரூபாய் மட்டுமே உயர்ந்திருந்த பெட்ரோல், டீசல் விலை, தற்போது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து லிட்டருக்கும் 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளாக நாம் எவ்வளவு செலுத்துகிறோம்?
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் தகவலின் படி, பிப்ரவரி 16 ஆம் தேதி டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 89.29 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 79.7 ஆகவும் இருக்கிறது.
எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்
இதில் பெட்ரோல் விலையில் மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி (VAT) மட்டும் 60 விழுக்காடாக, அதாவது ரூ. 53.51 ஆக இருக்கிறது என தி வயர் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கலால் வரி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், மாநில அரசுகளில் மதிப்பு கூட்டு வரி, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால், பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் தான் மதிப்பு கூட்டு வரி அதிகமாக இருப்பதாகவும், அச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி விதிப்பு நல்லதா? கெட்டதா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்போது அதன் பயனை மக்களுக்கு வழங்காமல், மத்திய அரசு வரியை உயர்த்தி வருவது தொடர்பாகச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வரி உயர்வுமூலம் கிடைக்கும் வருமானத்தை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பயன்படுத்துவதாகத் தெரிவித்துவந்தார்.
இந்நிலையில், விலை ஏற்றம் தொடர்பாக இரண்டு விதமான பொருளாதார பார்வையில் கருத்துகள் தெரிவிக்கப்படுதாகத் தி வயர் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் வலதுசாரி ஆதிக்கம் – பகுதி 2
முதலாவதாக, விலை உயர்வு சுற்றுசூழலுக்கு நல்லது என்றும், இது இந்தியாவின் ஏழை மக்களைப் பாதிக்காது, நடுத்தர வர்க மக்களை மட்டுமே சிறிது பாதிக்கும் எனச் சில பொருளாதார அறிஞர்கள் கூறிவருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் கடும் விலையேற்றம் பணிவீக்கத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தவதோடு, விவசாய மற்றும் உற்பத்தி துறையைப் பாதிக்கும். பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படாத நிலையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை குறைப்பு, நடுத்தர வர்க மக்களின் சுமையைக் குறைக்கும் எனச் சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவிப்பதாக தி வயர் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.