Aran Sei

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

லவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஞாயிற்றுக்கிழமை ஜஹாங்கிர்புரியின் சி பிளாக்கில் ‘திரங்கா யாத்திரை’ மேற்கொண்டனர். பேரணியையொட்டி டெல்லி காவல்துறையினர் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குழைந்துள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

பேரணியில் இரு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

யாத்திரை முடிந்த ஒரு நாள் கழித்து, காவல்துறை உதவி ஆணையர் (வடமேற்கு) உஷா ரங்னானி, “தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன, அதன்படி, நாங்கள் முடிவு எடுப்போம், தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

“தற்போதைக்கு, அப்பகுதியில் போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி

“வடமேற்கு டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலவர எதிர்ப்புப் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை உதவி ஆணையர் உஷா ரங்னானி  தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த அதிகாரி கூறும்போது, 500 க்கும் மேற்பட்ட காவலர்கள், 6 கூடுதல் படைகள் ஆகியோர் 24 மணிநேரமும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜஹாங்கிர்புரியில் சாலையோர கடைகளை அகற்றும் டெல்லி மாநகராட்சி: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதா?

“மொத்தம் 80 கண்ணீர்ப்புகை துப்பாக்கிகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூரையின் மேல் கண்காணிப்புக்காக ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மூத்த அதிகாரிகளும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்த இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜஹாங்கிர்புரியைத் தவிர மற்ற முக்கியமான பகுதிகளிலும் போதுமான படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை கூறியுள்ளது.

மரண படுக்கையிலிருந்து Congress எழுமா? | Nathan Interview

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்