Aran Sei

கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை, ஆட்டா ஆகியவற்றின் சில்லறை விலை 8 முதல் 19% வரை அதிகரிப்பு – நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தகவல்

கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 36.2 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19 விழுக்காடு அதிகமாகும். நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், கோதுமையின் சில்லறை மற்றும் மொத்த விலை குறித்து சேகரித்த தரவுகளின்படி, கோதுமையின் சில்லறை விலை 14 விழுக்காடு அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு: சாமானியர்களின் சேமிப்பை சூறையாடிய ஒன்றிய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஒரு கிலோ கோதுமை ரூ. 27-ல் இருந்து ரூ. 31 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ ரூ.38.2 ஆக உயர்ந்துள்ளது. இதன் விலை கடந்த ஓராண்டில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முன்னதாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி 0.5 விழுக்காடு உயர்த்துவதாக நேற்று (செப்டம்பர் 30) அறிவிப்பு வெளியிட்டது. அப்போது பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், தானியங்களின் விலை உயர்வு குறிப்பிட்டார்.

கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது – மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

உணவுப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. நெல் உற்பத்தி குறைவதால் கோதுமை பயன்பாடு அதிகரிக்கும். இதன் விளைவாக கோதுமையின் விலை அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் காய்கறிகளின் விலை குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

உணவுப் பொருள்களின் இந்த விலை அதிகரிப்பு, பணவீக்க எதிர்பார்ப்புகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்’ என்று கூறினார். இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்திற்கு பருவமழை மிகவும் முக்கியமானது, ஏனெனில் நாட்டின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட பாதி நீர்ப்பாசனத்தால் பயன்பெறுகின்றன.

Source : timesofindia

Nord stream pipeline leak | Europe energy crisis | Raise of right wing | Kalaiyarasan

கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை, ஆட்டா ஆகியவற்றின் சில்லறை விலை 8 முதல் 19% வரை அதிகரிப்பு – நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்