மத சகிப்புத்தன்மை அவசியம் என்றும் அனைத்து மதங்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது.
இந்தச் சூழலில் ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நுபுர் சர்மா சர்ச்சைப் பேச்சும் அதற்கு இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ள கண்டனம் குறித்து பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக், “நான் இதுதொடர்பான செய்திகளைப் பார்த்தேன். ஆனால், அந்த சர்ச்சைக் கருத்து என்னவென்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும், மத சகிப்புத்தன்மை வேண்டும் என்பதில் ஐ.நா. பொதுச் சபை உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Source: ndtv
நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.