உத்தரபிரதேச மாநிலத்தில் முஹம்மது நபிகுறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டங்களின்போது கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் இடித்து வருகிறது.
பிரக்யராஜில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது காரணம் என்ற குற்றச்சாட்டில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர் ஜாவேத் முகமதுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பொது அடைப்பு (பாரத் பந்த்) நடத்துவதற்கு மக்களை வாட்சப் மூலம் திரட்ட முயன்றது தெரியவந்ததாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அவரது மகள் அஃப்ரீன் பாத்திமா ஆலோசனை வழங்கியதாக ஜாவேத் தெரிவித்ததாக கூறும் காவல்துறையினர், “பாத்திமாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை. ஒருவேளை அவருக்கு எதிராக நம்பகமான ஆதாரங்கள் கிடைத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான அஃப்ரீன் பாத்திமா, வெல்ஃபேர் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளராகவும் உள்ளார்.
கலவரத்திற்கு காரணமானவர்கள் வீடுகளை இடித்துவரும் மாவட்ட நிர்வாகம், தவறான தகவல்கள் கொண்ட நோட்டீஸை வழங்கி ஜாவேத்தின் வீட்டையும் இடித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜாவேத்தின் வீட்டிற்கு வந்த அலகாபாத் காவல்துறையினர் வீடு இடிப்பதற்கான நோட்டீசை ஒட்டியுள்ளனர். ஜாவேத்தின் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடு அவரது மனைவியின் பெயரில் உள்ளது. வீடு அமைந்திருக்கும் நிலம், அவர்களின் பூர்வீக சொத்து. இதில் ஜாவேத்திற்கு சட்டப்பூர்வ பங்கு எதுவும் இல்லை.
மே 10 ஆம் தேதி முன் அறிவிப்பின்படி, மே 24 ஆம் தேதி விசாரணை நடைபெற்று, மே 25 ஆம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நோட்டீஸில் சுற்றறிக்கை எண், உத்தரவு எண் உள்ளிட்ட எந்த அடிப்படை விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இந்த நடவடிக்கைகள் எதுவும் குடும்பத்தினருக்கு தெரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டின் உரிமையாளரின் பெயரில் நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
மேலும், ஜூன் 10 தேதி வீடு இடிப்பதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 11 தேதி இரவு 11 மணிக்கு தான் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு சென்றால் தவறுகள் அனைத்து வெளியாகிவிடும் என்பதால், அதற்கு அவகாசம் அளிக்காமல் வார இறுதியில் அவசர அவசரமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வீடு இடிக்கப்பட்டுள்ளது.
வீடு இடிப்பதற்கு முன்பாக நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்ட சில ஆவணங்களும் கிடைத்துள்ளது. இவை அனைத்து ஆய்வு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் சேர்த்துக் கொள்ளப்படும்” என்று பிரக்யாராஜ் காவல்துறை மூத்த காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
உ.பி: 144 தடை உத்தரவை மீறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஊர்வலம் – வழக்கு பதிவு செய்த காவல்துறை
காவல்துறையின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஜாவேத்தின் இளைய மகள் சுமையா பாத்திமா, “எங்கள் வீட்டில் இருந்து இந்த பொருட்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாக சொல்வது நம்ப முடியாதது. வீடு இடிக்கப்பட்டதை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்துக் கொண்டிருந்தோம் ஏனென்றால், எங்களுக்கு வீடுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொலைக்காட்சியில் எங்கள் வீட்டில் இருந்து எங்களது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் எடுக்கப்பட்டதை பார்த்தோம். மாலையில் திடீரென வந்து இந்த பொருட்கள் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். காவல்துறை எங்களை சிக்க வைக்கப் பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜாவேத்தின் வழக்கறிஞர் கே.கே. ராய், “சனிக்கிழமை இரவு ஜாவேத் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஞாயிற்கிழமை ஜாவேத்தின் மனைவியின் பெயரில் இருக்கும் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப்படி மனைவியின் சொத்தில் கணவருக்கு பங்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Source: The Indian Express
எத்தன பேர் செத்தா மோடி வாய திறப்பாரு? | Aransei Haseef | Peralai Milton | Modi | BJP | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.