டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் ரிப்பளிக் தொலைக்காட்சி மற்றும் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, அந்த நிகழ்ச்சியின் நெறியாளர், நவிகா குமார் மீது ரிப்பளிக் தொலக்காட்சி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து இருப்பதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஆயுஷ் ஜிண்டால் தாக்கல் செய்த மனுவில், மகாராஷ்டிரா அரசின் பழிவாங்கும் திட்டத்தித்தால் ரிபப்ளிக் தொலைக்காட்சி குறிவைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நவிகா குமார் இதைத் தனது சொந்த நிறுவன நலன்களை அதிகரிக்க பயன்படுத்துவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – 4 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பு
டிஆர்பி முறைகேடு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வரும் நிலையில், ஜனவரி 18 ஆம் தேதி அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
”மும்பை கீழமை நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை பொருட்படுத்தாமல், வாட்சப் உரையாடல் மற்றும் டிஆர்பி முறைகேடு வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களைத் தவறாகப் புரிந்து கொண்டும், திரித்தும், குற்றம்சாட்டப்பட்ட நபர், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரப்பி அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட நவிகா குமாருக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு அழைப்பதோடு, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499/500 கீழ் குற்றவாளிக்குத் தண்டனை வழங்குமாறு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளதாக, லைவ் லா கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.