டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக, ஹரியானா மாநிலத்திலும் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக ஹரியானா விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர்-கெரா பகுதியில் கூடியுள்ள போராட்டக்காரர்கள், தேசிய நெடுஞ்சலையில் பயணித்து, டெல்லியிலிருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள மானேசர் வரை டிராக்டர் பேரணி செல்வார்கள் என்று ஹரியானா விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுயுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி
கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள ரேவாரி மசனியில் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் மானேசரில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் நுஹ் மாவட்டத்திற்குள்ளேயும் டிராக்டர் பேரணிகள் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜெய் கிசான் அந்தோலனின் நுஹ் மாவட்ட தலைவர் ரம்ஜான் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது, “ஷாஜகான்பூரில் உள்ள விவசாயிகள் மானேசர் வரை பேரணி செல்வார்கள். நுஹ் மாவட்டத்தின் சுனேஹ்ரா-ஜுன்ஹெரா எல்லையில் உள்ள விவசாயிகள் நுஹுக்குள்ளேயே ஒரு டிராக்டர் பேரணியை நடத்துவார்கள். அங்கு எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் 1,000 டிராக்டர்களை எதிர்பார்க்கிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மொத்த நாடும் உங்களுக்கு நன்றி சொல்லும்’ – பிரதமரின் தாயாருக்கு எழுதப்பட்ட பஞ்சாப் விவசாயின் கடிதம்
சன்யுக்த் கிசான் மோர்சாவை சேர்ந்த சஞ்சய் மாதவ் கூறும்போது, “இங்கே ஷாஜஹான்புரில் ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கூடியுள்ளனர். டிராக்டர் பேரணியால் எவ்வளவு தூரம் டெல்லியை நெருக்க முடியுமா அவ்வளவு தூரம் நெருங்குவோம். தடுத்து நிறுத்தப்பட்டால், திரும்பி விடுவோம். ஆனால், அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். எங்களில் இருந்து குறைந்தது 1,000 டிராக்டர்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
விவசாய சட்டங்களை ஏற்க முடியாது -’எங்கள் கனவுகள் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை’
மானேசரில் உள்ள என்.எஸ்.ஜி வளாகம் வரை பேரணி நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்திய ரேவாரி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஜோர்வால்,”எத்தனை டிராக்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனாலும், டிராக்டர்களோடு சேர்த்து எத்தனை வாகனங்கள் பங்கேற்கும், எத்தனை விவசாயிகள் பங்கேற்பார்கள், எத்தனை தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றிய தோராயமான கணக்கை நாங்கள் எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.