Aran Sei

கர்நாடகாவில் ‘நீலக் கடல்’ – டாக்டர் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

ர்நாடகாவின் ராய்ச்சூரில் ஜனவரி 26 அன்று நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடாவின் உத்தரவினால் அகற்றப்பட்டது. இந்த நிகழ்வை கண்டித்து அந்த மாவட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக்கோரி பிப்ரவரி 19 அன்று பெங்களூரில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் அம்பேத்கரின் படம் மற்றும் நீல நிற கோடியை ஏந்தி பேரணி நடத்தியுள்ளனர்.

ஜனவரி 27 அன்று ராய்ச்சூரில் உள்ள பல தலித் அமைப்புகள் அந்த மாவட்ட நீதிபதிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியுள்ளன. ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா கர்நாடக மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பெங்களூரு, தலைமை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை அகற்றக் கூறிய மாவட்ட நீதிபதியை ‘இடைநீக்கம்’ செய்யாமல், ‘இடமாற்றம்’ மட்டுமே செய்தற்கும், நீதிபதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து சம்விதானா சுரக்ஷனா மஹா ஒக்குதா என்ற தலித் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக அமைப்புகளும் ஒன்றுகூடி இந்த பேரணிக்கான அழைப்பை விடுத்திருந்தது.

பெங்களூரின் சுதந்திர பூங்கா அருகில் பேரணியில் கலந்து கொண்டவர்களைக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். அதில், “டாக்டர் அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை நான் கண்டிக்கிறேன். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் எந்தச் செயலையும் எந்தச் சூழ்நிலையிலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. டாக்டர் அம்பேத்கரின் மாண்பையும் கௌரவத்தையும் நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவறு செய்த ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா மீது நடவடிக்கை எடுப்பதாகக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

பிப்ரவரி 4 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ விழாக்களிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source : The Wire

கர்நாடகாவில் ‘நீலக் கடல்’ – டாக்டர் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்