மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் 113 வது பிறந்த நாளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட “ஈ.எம்.எஸ்ஸின் உலகம்” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய பினராயி விஜயன், “ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான ஒன்றிய அரசின் முடிவை விமர்சித்தார்.
இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களிடையே பிளவை உருவாக்க சங் பரிவார் அமைப்பினர் முயற்சித்து வருகின்றனர். சங் பரிவார் அமைப்பினர் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சங் பரிவார் அமைப்பினர் ஹிட்லரின் நாஜி பிரச்சாரத்தை பின்பற்றி இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தாக்குகின்றனர். மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் 2 வேறுபட்ட விஷயங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க முன்வர வேண்டும்” என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : NDTV
அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.