Aran Sei

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – கோரிக்கையை முன்னிறுத்தி உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர்.

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

 

கையெழுத்து இயக்கம், போராட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி  உள்ளிட்ட போராட்டத்தின் பல வழிமுறைகளை, எழுவரின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் செய்தனர்.

மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்

அண்மையில் பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து நடைபெற்ற பரப்புரையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குனர்கள் வெற்றிமாறன், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விடுதலைக்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்திருந்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறது. இப்படியாக தமிழக அரசியல் சூழலில் எழுவரின்  விடுதலை மையப்பொருளாக மாறியுள்ளது.

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – மறுப்புத் தெரிவித்த தமிழக அரசு

இந்நிலையில், எழுவர் விடுதலையை வலியுறுத்தி சம்பத் குமார் மற்றும் ஆன்டனி என்கிற இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள கல்யாணபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு கம்ம்யூனிஸ்ட் கட்சி (சி.பி), இடது தொழிற்சங்க மய்யம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – கோரிக்கையை முன்னிறுத்தி உண்ணாவிரதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்