ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் காஷ்மீர் அரசியல் கைதிகள், இளைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் அவலநிலை குறித்து அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு (APHC) கடும் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக் நேற்று கூறியுள்ளார்.
“ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள அரசியல் கைதிகளின் வாழ்க்கை ஓமிக்ரான் பரவலால் பெரும் ஆபத்தில் உள்ளது. அவர்கள் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சற்று ஓய்வு அளிக்க வேண்டும்”என்று 2019 ஆகஸ்ட் முதல் வீட்டுக் காவலில் இருக்கும் மிர்வைஸ் தனது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைகளில் உள்ள பெரும்பாலான அரசியல் கைதிகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்டகால சிறைவாசம் மற்றும் சிறையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்காததால் அவர்கள் இன்னமும் மோசமடைந்துள்ளதாக அவரவர்களின் குடும்பங்கள் கூறுகிறார்கள் என்று மிர்வைஸ் உமர் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
காஷ்மீர் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC), அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஆசியா வாட்ச், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆகியவை கவனத்தில் கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.