Aran Sei

தொடர்ந்து விலையுயரும் பெட்ரோல், டீசல் – சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஆளும் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

நேற்று (மார்ச் 27), அவுரங்காபாத்தில் உள்ள கிராந்தி சவுக்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாராஷ்ட்ரா சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வேயும் அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் ஷிர்சத் உள்ளிட்ட உள்ளூர் சிவசேனா தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ள அம்பாதாஸ் தன்வே, “விலைவாசி உயர்வு பற்றி பேசிதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்களின் ஆட்சியில், 2014ஆம் ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாயில் இருந்து தற்போது 1,050 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த எரிபொருள் விலையேற்றம் பணவீக்கத்தை உயர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து ஒன்றிய அரசு ஓடி ஒளிகிறது என்று சஞ்சய் ஷிர்சட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (மார்ச் 27), பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 55 பைசாவும் உயர்த்தப்பட்டது. தினசரி விலைத் திருத்தம் செய்யும் முறை மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு வாரத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் மொத்த விலை உயர்வானது லிட்டருக்கு ரூ. 3.70-3.75 ஆக இருக்கிறது.

எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி,  டெல்லியில் பெட்ரோல் விலை முன்பு லிட்டருக்கு ரூ. 98.61 ஆக இருந்தது. தற்போது, ரூ.99.11 ஆக உயர்ந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.87-லிருந்து ரூ. 90.42 ஆக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை: ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக விலை உயர்வு

டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் விலை உயர்ந்துள்ளது. அந்தந்த மாநிலங்களின் வரிவிதிப்புகளுக்கு ஏற்ப  மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறுபடும்.

Source: PTI

தொடர்ந்து விலையுயரும் பெட்ரோல், டீசல் – சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்