Aran Sei

விளைந்த பயிர்களை அழிக்க வேண்டாம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் வேண்டுகோள்

விளைந்த பயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருங்கள் என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கேட்டுக்கொண்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராகேஷ் திகாத்தின் பேச்சை ஏற்று பிஜ்னூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தனது கோதுமை வயிலில் பாதியை  அழித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் பயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க கூறினேன், “போராட்டம் இன்னும் அந்த  நிலைமையை அடைந்துவிடவில்லை. அதனால், விவசாயிகள் எந்த ஒரு கடுமையான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம்” எனத் திகாத் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் கைதான பாஜக இளைஞரணி செயலாளர் – போதை பழக்கத்திற்கு அடிமையானவரென்று தந்தை குற்றச்சாட்டு

”நான் பயிர்களை இழக்க தயாராக இருங்கள் என்று கூறினேன். அதற்குப் பயிர்களுக்குத் தீ வைய்யுங்கள் என்று அர்த்தம் இல்லை. இதனால் பெரிய இழப்பு ஏற்படும்” என ராகேஷ் திகாஷ் மீண்டும் வலியுறுத்தியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிஜ்னூர் மாவட்டத்தின் குல்சானா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற விவசாயி, தனது வயலில் விளைந்த பயிர்களை அழிக்கும் காணொளி வெளியானது.

இது தொடர்பாகத் தொலைபேசியில் ரோகித் குமாரை தொடர்பு கொண்டபோது, “ஹிசார் மகாபஞ்சாயத்தில், ராகேஷ் திகாத் பேசியதை கேட்டபிறகு, எனது 5 ஏக்கர் வயலில் பயிரிடப்பட்டிருந்த கோதுமையில் 2.67 ஏக்கர் பயிரை டிராக்டர் ஏற்றி அழித்து விட்டேன். என் குடும்பத்திற்கு தேவையானதை மட்டும் வைத்திருக்கிறேன். எங்கள் கோரிக்கைகள் கேட்கப்படாதபோது பயிர்களை விற்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

நடைமுறையில் இருக்கும் அமைப்பை நம்புவதாகக் கூறிய ராகேஷ் திகாத், ”மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியிருப்பதாலும், அங்கு மகாபஞ்சாயத்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிவிட்டேன்” எனத் திகாத் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடைக்காலங்களிலும் விவசாயிகள் போராட்டங்களைத் தொடர்வார்கள் என்று கூறிய திகாத், ”பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் காசிப்பூர் எல்லையில் திருமணத்தை  நடத்த ஒரு அழைப்பு கூட வந்திருக்கிறது” என அவர் குறிப்பிட்டதாக, தி இந்து கூறியுள்ளது.

 

விளைந்த பயிர்களை அழிக்க வேண்டாம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்