காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைபடுத்துவதோடு, தங்கள் எதிர்காலம் தொடர்பான முடிவை எடுக்கக் காஷ்மீர் மக்களுக்கு முழு சுதந்திரத்தையும், இந்தியா வழங்கப்பட வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
‘காஷ்மீர் ஒற்றுமை நாள்’ பேரணியின் ஒரு பகுதியாக, கோட்லியில் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றிய இம்ரான் கான், இந்தியா குறிப்பிட்டு “நான் இன்று உங்களிடம் மீண்டும் கூறுகிறேன். காஷ்மீர் பிரச்னையில் எங்களுடன் இருக்கும் முரண்பாட்டைத் தீர்க்க வாருங்கள். அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைப்படுத்துவது. பிறகு எங்களுடன் பேச வாருங்கள். பின்னர் ஐ.நா தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை வழங்குங்கள்” எனப் பேசியுள்ளார்.
அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்
“நாங்கள் மீண்டும் உங்களுடம் பேசத் தயாராக இருக்கிறோம். ஆனால் இதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். நட்பின் அடிப்படையில் நாங்கள் பேச வருவதை எங்களின் பலவீனம் என்று தவறாக நினைக்காதீர்கள்” என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானை, தொடர்ந்து இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வி, காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு என்பது ”தெற்காசியாவின் அமைதிக்கான திறவுகோல்” என்றும், ”சுயநிர்ணய உரிமைக்கான உரிமையைக் காஷ்மீர் மக்கள் உணரும் வரை நாங்கள் தொடர்ந்து அனைத்து ஆதரவுகளையும் வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.
ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் நிதி திரட்டல் – மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு
காஷ்மீர் பிரச்னையை ”கண்ணியமாக” தீர்ப்பதற்கான தனது விருப்பத்தைப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா வெளிப்படுத்திய அடுத்த சில தினங்களில், பாகிஸ்தான் பிரதமரும், அதிபரும் இந்த கருத்துக்களை வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.