ஜோசியம் மீண்டும் ஒரு முறை படுதோல்வி அடைந்துள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் தெரிவித்துள்ளார்.
ஜோசியக்காரர்கள் மற்றும் தங்களது கணிப்புகள் கண்டிப்பாக நடக்கும் என்று கூறிக் கொள்பவர்களுக்கு எதிராக மே 26 அன்று விடுக்கப்பட்ட சவாலில் பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்துள்ளனர் என்று நரேந்திர நாயக் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கர்நாடகாவில் தட்சிண கன்னடாவில் உள்ள ஒரு மசூதியின் புனரமைப்பு பணியின் பொழுது கோயில் போன்ற அமைப்பு தென்பட்டதாக இந்துத்துவ அமைப்பினரை தெரிவித்தனர். இதன் விளைவாக மசூதி புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிய தாம்பூல பிரஷ்னா எனும் வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கும் சோதிட சடங்கை விஷ்வ இந்து பரிஷத் எனும் அமைப்பு நடத்தியது. அதில் கேரளாவில் இருந்து வந்திருந்த கோபாலகிருஷ்ணர் பணிக்கர் எனும் ஜோசியர் 9 வெற்றிலைகளை கொண்டு மசூதிக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஜோஸ்யக்காரர்களுக்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு சவால் விட்டது. அதில் நாங்கள் 7 சீலிடப்பட்ட கவரில் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தால் 1 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சவாலை 6 நாட்கள் ஆகியும் யாரும் ஏற்க முன் வராததால் ஜோசியம் மீண்டும் ஒரு முறை தோற்றுப்போனதாக இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 51 வது பிரிவுக்கு அதன் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும்” என்று இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.