பிப்ரவரி 25 ஆம் தேதி, நடைபெற இருந்த ’பசு மாடு அறிவியல்’ தேர்வை, ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக, ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் செய்தியில், “பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற இருந்த பசு மாடு அறிவியல் ஆன்லைன் தேர்வு மற்றும் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த மாதிரி தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை
மேலும், அந்த இணையதளத்தில், வெளியிடப்பட்டிருந்த 54 பக்க பாடதிட்டமும் நீக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம், 2019 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பை உருவாக்கியதோடு, அதன் தலைவராக வல்லபாய் கத்தரியா மற்றும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களாக சுனில் மான்சிங்கா, ஹூகும் சந்த் சாவ்லா ஆகியோரை நியமித்தது.
”போலி அறிவியலை ஊக்குவிக்கும்” வகையிலான வல்லபாய் கத்தரியாவின் செயல்பாடுகள் அரசாங்கத்தில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிப்பதாகவும், இது தொடர்பான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குக கத்தரியா பதிலளிக்கவில்ல எனவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்
இது தொடர்பாக பேசியுள்ள ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் சாவ்லா, “எங்களுக்கு நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது என செய்தி வந்தது. தேர்வை நடத்துமாறு அமைச்சர் கிரிராஜ் சிங்கை நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர், ‘ஹம் நஹின் கார் பேயங்கே’ (நாங்கள் அதை நடத்த முடியாது) என்றார்.” என தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
”புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தேர்வைப் பற்றி முடிவெடுப்பார்கள்” எனச் சாவ்லா கூறியிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.