Aran Sei

ராஞ்சி: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

Credit: The Wire

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி கட்டாயப்படுத்தப்பட்டு இரண்டு இஸ்லாமியர் இளைஞர்கள் இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 11 தேதி இரவு 8 மணிக்கு ஜீஷன், ஃபைசான் ஆகியோர் ராஞ்சியில் உள்ள சுஜாதா சவுக் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும்போது அங்கு வந்த இந்துத்துவா கும்பல், அவர்களை தாக்கியுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்துள்ள ஜீஷன், “அவர்கள் குறைந்தது 30 பேரோ அதற்கு அதிகமாகவோ இருந்தனர். கையில் ஆயுதங்களை வைத்திருந்தனர். எங்களை கண்டதும், எங்களை சூழ்ந்து கொண்டு எங்கள் பெயர்களை கேட்க ஆரம்பித்தனர். பின்னர் எங்களை தாக்க தொடங்கினர். எனது சகோதரனை அவர்கள் தொடர்ந்து பல முறை தலையில் தாக்கியதில் அவருக்குத் தலையில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. எனக்கும் ரத்தம் வரத் தொடங்கியது. ரத்தத்தைப் பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். நாங்களும் வெளியேறினோம். பின்னர் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது பஜ்ரங் தளம் தாக்குதல் – தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாத காவல்துறை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறும் ஜீஷன், சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களது இரு சக்கர வாகனத்தின் சாவியை காவல்துறையினர் கொடுத்ததாகவும் இதனால் வாகனம் இன்னும் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சாவியை பெற்றுக் கொள்ள காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜீஷன், “வாக்குமூலம் அளிக்க காவல்நிலையம் செல்லும் அதே பகுதியில் பஜ்ரங் தள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளால், காவல்நிலையைம் செல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் பிற மதத்தினரின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் – கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் பிரச்சாரம்

ஜீஷன் தாக்கப்பட்டது தொடர்பாக சுதியா காவல்நிலையை அதிகாரியிடம் ஜீஷனின் மாமா நசீம் அக்தர் புகார் அளித்துள்ளார். அதில், சுஜாதா சினிமா வளாகத்தில் உள்ள டோமினோஸ் உணவகத்திற்கு வெளியே 30,40 பேர் கொண்ட கும்பல் எனது மருமகன்களின் உயிரைப் பறிக்க முயன்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஜீஷன் தாக்கப்பட்ட அதே நாளில், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, நபிகளுக்குத் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

போராட்டத்தின்போது கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். கல்வீச்சு சம்பவத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source: The Wire

தூய்மையான இனம் Jeevasagapthan Interview | Periyar | RN Ravi | Modi | BJP

ராஞ்சி: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்