மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு செல்ல முயன்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியை பஜ்ரங் தளம் அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்பீர் கபூர் 2011-ம் ஆண்டு சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். மாட்டிறைச்சி பிடிக்கும் என கூறியவரை சாமி தரிசனம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று பஜ்ரங் தள் நிர்வாகி அங்கிட் சவுபே தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் தங்களது படம் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி கபூர் தம்பதி தொடர்ச்சியாக கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் இயக்குநர் அயன் முகர்ஜி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் வருவது குறித்து கேள்விப்பட்டு பஜ்ரங் தள தொண்டர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.
கபூர் தம்பதி சாமி தரிசனம் செய்ய சென்ற போது, அவர்களை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், பஜரங் தள தொண்டர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். ஆனாலும் கபூர் தம்பதியை பஜ்ரங் தள தொண்டர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். கபூர் தம்பதி வந்ததும் பஜ்ரங் தள தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறி முழக்கமிட்டனர்.
இதனால் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி மட்டும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தியதாக கோயில் பூசாரி ஆசிஷ் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கபூர் தம்பதி உடனே இந்தூர் புறப்பட்டுச் சென்றது.
ரன்பீர் கபூர் முன்பு தனக்கு சிக்கன், மட்டன் மற்றும் மாட்டு இறைச்சி சாப்பிட பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். எனவேதான் அவரை தரிசனம் செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆலியா பட்டும் தனது படத்தை பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் பார்க்கவேண்டியதில்லை என்று கூறியிருந்தார் என்று பஜ்ரங் தள நிர்வாகி அங்கிட் சவுபே தெரிவித்துள்ளார்.
Source : the wire
கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.