Aran Sei

ராமநாதபுரம்: ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என கூறிய தலைமை ஆசிரியர் – ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர எந்த தடையும் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம்

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரும், மாணவியின் தாயும் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த காணொளியில், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியின் தாயிடம், “பள்ளிக்கு வரும்போது பள்ளிக்குள் சால் (ஹிஜாப்) அணிந்து வரக் கூடாது அனைத்து மாணவிகளுக்கும் ஒரே ரூல்ஸ் தான். நான் அட்மிஷன் போடும்போதே பள்ளிக்குள் சால் அணிய அனுமதி இல்லை என கூறினோம், இப்போது வந்து சால் அணிந்து தான் வருவேன் என்றால் என்ன செய்வது. இங்கு எல்லா மாணவிகளுக்கும் ஒரே ரூல்ஸ் தான். உங்கள் ஒரு மாணவிக்காக அதனை மாற்ற முடியாது” என்கிறார்.

கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்

அதற்கு அந்த மாணவியின் தாய், “எங்கள் ஜமாத் பெரியவர்களிடம் ஹிஜாப் அணிந்துவர தடை இல்லை என நீங்கள் சொன்னதாக தெரிவித்தார்கள். அரசு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என சட்டம் இயற்றவில்லையே” எனக் கூறியதும், அதற்கு தலைமை ஆசிரியை, “இல்லை அரசு ரூல்ஸ் போட்டு இருக்கிறது” என தெரிவித்தவுடன், “அப்படி ரூல்ஸ் போடவில்லை என நிரூபித்தால் அனுமதிப்பீர்களா?” என மாணவியின் தாய் கேள்வி கேட்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜமாத்தார்களுடன் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் கூட்டி கருத்துக் கேட்கப்பட்டது.

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

அதில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கு வருவார்கள் என்றும், அதற்கு தடை தெரிவிக்கக் கூடாது என ஜமாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், பிள்ளைகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்றும் அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அதே சமயம், தலைமை ஆசிரியரிடம் பேசியதை தெரியாமல் காணொளியாக எடுத்து அதனை வெளியிட்டது தவறு என மாணவியின் பெற்றோரிடமும், ஜமாத்தார்களிடமும் தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசுப்பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் அணியாமலும் வரலாம் எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Source : DTNext

2 ஆயிரம் ஆண்டுகால வலி | ஆ.ராசா அப்படிதான் பேசுவார் | Mathivathani Speech | A Raja | Manusmriti | DMK

ராமநாதபுரம்: ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என கூறிய தலைமை ஆசிரியர் – ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர எந்த தடையும் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்