Aran Sei

ராமர், சீதையுடன் ஒன்றாக அமர்ந்து ஒயின் குடிப்பார்: சூத்திர வகுப்பை சேர்ந்த சம்புகனின் தலையை துண்டித்தவர் ராமர் – கர்நாடக பேராசிரியர் கே.எஸ். பகவான் பேச்சு

கவான் ராமர், சீதையுடன் நண்பகலில் ஒன்றாக அமர்ந்து ஒயின் குடிப்பார் என்ற கர்நாடக பேராசிரியரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.எஸ். பகவான். எழுத்தாளராகவும் உள்ள இவர், மாண்டியா நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதில், “ராமராஜ்ஜியம் கொண்டு வரப்படும் என்றொரு பேச்சு நிலவி வருகிறது. வால்மீகியின் ராமாயணத்தில் உத்தர காண்டம் பகுதியை ஒருவர் வாசித்து பார்க்கும்போது, ராமர் ஒன்றும் உயர் சிறப்பு வாய்ந்த ஒருவர் இல்லை என்பது புலப்படும். அவர் 11 ஆயிரம் ஆண்டுகள் எல்லாம் ஆட்சி புரியவில்லை. 11 ஆண்டுகளே ஆட்சி செய்துள்ளார் என்று பேசியுள்ளார்.

‘ராமர் கடவுள் இல்லை; ஒரு கதாபாத்திரம் மட்டுமே’ – பாஜக கூட்டணி கட்சி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கருத்து

ராமர் நண்பகலில் சீதையுடன் அமர்ந்து கொண்டு, அன்றைய தினம் முழுவதும் ஒயின் குடித்தே காலம் கழித்திடுவார். ராமர் தனது மனைவியை காட்டுக்கு அனுப்பினார். அதனை பற்றி அவர் கவலையே கொள்ளவில்லை.

ஒரு மரத்தின் அடியில், தனது தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் தனக்கு தண்டனை கொடுத்து கொள்ளும் வகையில் அமர்ந்து இருந்த, சூத்திர வகுப்பை சேர்ந்த சம்புகனின் தலையை துண்டித்தவர் ராமர். அவர் எப்படி உயர்ந்த சிறப்புடையவர் ஆக முடியும்? என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Rangaraj Pandey speech in Brahmin association meeting sparked row | sathyaprabhu interview | Sudras

ராமர், சீதையுடன் ஒன்றாக அமர்ந்து ஒயின் குடிப்பார்: சூத்திர வகுப்பை சேர்ந்த சம்புகனின் தலையை துண்டித்தவர் ராமர் – கர்நாடக பேராசிரியர் கே.எஸ். பகவான் பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்