உத்தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ள, மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை தற்போது ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடையை பெற்று வருகிறது. அத்துடன், பல தன்னார்வலர்களும் நன்கொடைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிக்கும் இயக்கத்தை அம்மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.கோபாலையா தொடங்கி வைத்துள்ளார்.
’அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை 100 கோடி நன்கொடை’ – வரிசை கட்டும் பாலிவுட் நடிகர்கள்
”இந்த நிகழ்வில் நான் ஒரு அமைச்சராக கலந்துக்கொள்ளவில்லை, ஒரு ராம பக்தனாக கலந்துகொண்டு இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1,11,111 நன்கொடை – பிரதமருக்கு அனுப்பிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்
”இந்த கோயிலின் கட்டுமானத்திற்கு செலவாகின்ற தொகையை உத்தரபிரதேச அரசாங்கமே தனியாக செய்து முடித்து விடும். ஆனால், கோயில் கட்டுமானத்தில் தேசத்தின் 130 கோடி மக்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக நன்கொடை சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.கோபாலையா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு – பாஜக தலைவர்கள் விடுதலைக்கு எதிராக வழக்கு
அமைச்சருடன், சட்டமன்ற உறுப்பினர் பிரிதம் கவுடா மற்றும் பாஜக தொண்டர்கள் பீரனஹல்லி கீரே, கே.ஆர்.புரம், சித்தையா நகர் ஆகிய பகுதிகளில், வீடு வீடாகச் சென்று நன்கொடை பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5,00,100 ரூபாயும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், 1,11,111 ரூபாயும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் 1,00,000 ரூபாயும் நன்கொடையாக அளித்துள்ளனர்.
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை பெறும் இயக்கங்கள் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றபோது, சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.