மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விவரங்களை மகாராஷ்டிர காவல்துறை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ராமநவமி கொண்டாட்டங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒலி மாசுபாடு விதிமுறைகளைப் பின்பற்றியும், வகுப்புவாத நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையிலும் விழாவைக் கொண்டாடுமாறு மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களில் ஒலி மாசுபாடு, அனுமதிக்கப்பட்ட நேர வரம்புகளை மீறியது ஆகியவை அடங்கும்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், “30 இடங்களில், ஹனுமான் சாலிசா பாராயண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக, தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக ஐந்து குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
இளையராஜா, அம்பேத்கர், யுவன், மோடி சர்ச்சை… விளக்கமளிக்கிறார் பேரா. சுந்தரவள்ளி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.