Aran Sei

மாவட்ட தலைநகரங்களில் பேரணி: விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியினர் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில், மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் விவாசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றுள்ளது. புதிய வேளாண் திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய மூன்று சட்டங்களான விலை உறுதி மற்றும் பண்ணை சேவை சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்துகிறார்கள்.

தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படக்கூடிய மத்திய அரசின் சட்டத்தை கண்டித்தும் மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் விவசாயிகள் ஆதரவு பேரணி தேசிய கொடி ஏந்தி ஏர் கலப்பை, நெல் நாற்றுக்களுடன் பேரணியின் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை முனிச்சாலை பள்ளிவாசல் பகுதியில் துவங்கி தெப்பக்குளம் ரோடு கணேஷ் தியேட்டர் அருகில் பேரணி நிறைவு பெற்றுள்ளது. மாவட்ட துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர், செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?

மேலும், திருச்சி, காந்தி மார்க்கெட்டிலிருந்து பாலக்கரை ரவுண்டனா வரை (எஸ்டிபிஐ) கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடையில் தொடங்கி பாலக்கரை ரவுண்டானா வரை பேரணி சென்றுள்ளனர்.

‘உழைக்கும் மக்களுக்கு எதிரான மோடி அரசின் அரசப்பயங்கரவாதம்’ – விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்

திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ (SDPI) சார்பில் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளில்  இரு சக்கரப் வாகன பேரணி நடைபெற்றுள்ளது.

மாவட்டத் தலைவர் முஸ்தக் பாஷா தலைமையில் நடைபெற்ற பேரணியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணியானது  பெரியார் சாலை வழியாக அண்ணா சாலை அருகே  நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அண்ணா சிலை அருகே கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராகவும் உடனடியாக திரும்பபெற கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாவட்ட தலைநகரங்களில் பேரணி: விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்