Aran Sei

‘மதுராவை முசாபர்நகராக்க அனுமதியாதீர்’- கலவரங்கள் அனைத்தையும் அழித்துவிடுமென ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

யாத்திரை நகரமான மதுராவின் அமைதியைச் சீர்க்குலைக்க விரும்பும் சில சக்திகளை வெற்றிபெற அனுமதிக்காதீர்கள் என்று அந்நகர மக்களை பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, நேற்று(டிசம்பர் 27), உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராகேஷ் திகாயத், எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், “அவர்களுக்கு இங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. ஆகவே, மக்கள் அமைதியாக பிரார்த்தனை செய்து, இயல்பாக வாழ்க்கை நடந்தி வரும் யாத்திரை நகரமான மதுராவின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முசாபர்நகர் போன்று மதுராவின் சூழலை கெடுக்க விரும்புபவர்களின் முயற்சிகளைத் தோற்கடியுங்கள். அத்தகையவர்களிடம் இருந்து கவனமாக இருங்கள். அவர்களின் பொறியில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இல்லையெனில், மதுராவில் கலவரத்தை உருவாக்கி, வேலையின்மையை அதிகரிக்க செய்துவிடுவார்கள்” என்று ராகேஷ் திகாயத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: PTI

‘மதுராவை முசாபர்நகராக்க அனுமதியாதீர்’- கலவரங்கள் அனைத்தையும் அழித்துவிடுமென  ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்