Aran Sei

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

ங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்பிரவரி 10 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தல், 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று(பிப்பிரவரி 1) நடைபெற்றது.

பஞ்சாப்புக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இந்நிலையில், இன்று(பிப்பிரவரி 15), லக்கிம்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத், “தங்களை ஆட்சி செய்ய முதலமைச்சரும், பிரதமரும் வேண்டுமா? இல்லையென்றால், வடகொரியாவில் இருப்பது போல் இங்கும் ஒரு கிம் ஜோங் உன் வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும். நாட்டில் எந்த மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி அமையக் கூடாது. மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை புத்திசாலித்தனத்துடன் செலுத்துமாறு நாங்கள் வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாஜகவின் பரப்புரைகள் குறித்து விமர்சித்திருந்த ராகேஷ் திகாயத், “முசாஃபர்நகர் ஒன்றும் இந்து-இஸ்லாமிய மோதல்களுக்கான மைதானம் அல்ல. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியைக் காண விரும்புகிறது. அதனால் இங்கு வந்து இந்து, இஸ்லாம், ஜின்னா, மதம், சாதி என பேசுபவர்கள் வாக்குகளை இழப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

Source: NDTV

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்