ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக் கோரி 13 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (மே.14) காலை அவர் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இப்பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர், உள்துறை செயலாளர், சிறைத்துறைத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டுமென சிறைக்கைதிகள் உரிமை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட முருகன் கடந்த 30 வருடங்களாக தண்டனை பெற்று வருகிறார். நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் நளினிக்கும் பரோல் கிடைத்துள்ளது. அதேபோல தனக்கும் பரோல் வேண்டும் என்று கூறி உண்ணவிரதப்போராட்டம் நடத்தி வருகிறார்.
கர்நாடகா: கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி கொடுக்கும் பஜ்ரங் தள்
இந்த நிலையில், வேலூர் சிறையில் முருகன் 13 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 6 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உணவு எதுவும் எடுத்து கொள்ளாததால் காலை மயக்கமாகியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், உள்துறை செயலாளர், சிறைத்துறைத் தலைவர் ஆகியோருக்கு சிறைக்கைதிகள் உரிமை மையம் எழுதியுள்ள கடிதத்தில், ”இராசீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருக்கும் திரு.முருகன் என்ற ஸ்ரீகரன் த/பெ வெற்றிவேல் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு 6 நாட்கள் அவசர விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் 6 நாட்கள் விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வழியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலை பலமுறை மோசமாக நிலைக்குச் சென்றுள்ளது. இன்று காலை அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி, தனது அறையில் படுத்த படுக்கையாக உள்ளார். சிறை அதிகாரிகள் அவரின் ஆபத்தான தற்போதைய நிலையை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று” தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2020ல் தன்னை குடும்பத்துடன் வீடியோ கால் பேச அனுமதி அளிக்காததால், உணவு உண்ணாமல் இருந்து ஜீவ சமாதி அடைவதாக தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார். வீடியோ கால் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தும், அப்போது தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு, முருகனின் மனைவி நளினியின், தாயாரான பத்மா, தனது மருமகனுக்கு பரோல் வழங்கவேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் அவர் தனது மகள் நளினி பரோலில் இருப்பதால், அவரது கணவர் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று மனு அளித்து இருந்தார்.
BJP Agenda-ஐ பரப்பும் தமிழக ஊடகங்கள் I VCK Vikraman
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.