Aran Sei

ராஜஸ்தான்: மூடநம்பிக்கையால் பலியான இரண்டு உயிர்கள்

ராஜஸ்தானில் நள்ளிரவில் பாம்புக் கடியைக் குணமாக்க மருத்துவமனைக்கு பதிலாகத் தனது பெண் பிள்ளைகளைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அந்த 2 பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இரவு நேரத்தில் இரண்டு சிறுமிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர்களை விஷப்பாம்பு கடித்துள்ளது. அலறியடித்து எழுந்த சிறுமிகள் உடனே மயக்கமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இருவரையும் தூக்கிச்சென்று, அலிபூர் கிராமத்தில் உள்ள பக்த வாலா பாபாவிடம் குணமடைய வேண்டியுள்ளனர்.

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு அடுத்த 3 மணி நேரம் தான் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான நேரம். அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் பிராத்தனை செய்து பெற்றோரின் மூட நம்பிக்கையால் 2 பெண் சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

பாம்பு தீண்டியதால் அழைத்து வந்த சிறுமிகளின் தலையில் துடைப்பங்களால் அடித்து மந்திரங்கள் ஓதியுள்ளார் சாமியார் பாபா. அவ்வாறு செய்து மூன்று மணிநேரமாகியும், சிறுமிகளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, தாமதமானதால் சிறுமிகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவியிடம் கட்டாய பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்க கோரும் வழக்கு – ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாம்புக் கடிக்கு உடனடி சிகிச்சை வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாமல்,சாமியாரை நம்பும் மூடநம்பிக்கைகள், இந்தியாவில் இன்னும் இருப்பது அதிர்ச்சியுள்ளது.

A Raja speech about hindus was a reference from manusmrithi – Mathivathani Interview | A Raja speech

ராஜஸ்தான்: மூடநம்பிக்கையால் பலியான இரண்டு உயிர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்