Aran Sei

ராஜஸ்தான்: பட்டியல் சமூக தம்பதிக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பூசாரியை கைது செய்த காவல்துறை

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் உள்ள ஒரு கோயிலில் வழிபாடு செய்யச் சென்ற பட்டியல் சமூக தம்பதியை அனுமதிக்காத கோயில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகாந்த் கிராமத்தில் உள்ள கோயில் வாசலில் வேல பாரதி என்ற பூசாரி அந்த தம்பதிகளைத் தடுத்து நிறுத்துகின்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும் ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

பின்னர் பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுத்துள்ளனர். அந்த பூசாரியின் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“இந்த புதுமண தம்பதியினர் தங்களது திருமணத்திற்குப் பிறகு அந்த கோயிலில் தேங்காய் படைக்க விரும்பினர். அதனையொட்டி நாங்கள் கோயிலுக்குச் சென்ற பொழுது கோயில் பூசாரி எங்களைத் தடுத்து நிறுத்தினார். நாங்கள் பட்டியல் சமூகம் என்பதால் எங்களைக் கோயிலுக்குள் செல்ல வேண்டாம் என்று பூசாரி கூறினார் என்று மணப்பெண்ணின் உறவினரான தாரா ராம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

சில கிராம மக்களும் பூசாரியின் இந்த முடிவிற்கு ஆதரவளித்தனர். நாங்கள் பூசாரியிடம் வாக்குவாதம் செய்தோம். ஆனால் அவரை பிடிவாதமாக இருந்தார். ஆதலால் நாங்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தோம் என்று தாரா ராம் கூறியுள்ளார்.

Source : NDTV

இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது

ராஜஸ்தான்: பட்டியல் சமூக தம்பதிக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பூசாரியை கைது செய்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்