Aran Sei

ராஜஸ்தான்: நபிகள் நாயகத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து வெளியேறிய முனிசிபல் கவுன்சிலர்

முகமது நபியை விமர்சிக்கும் கட்சிக்கார்களை கட்டுப்படுத்த பாஜக தவறிவிட்டது என்று கூறி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனிசிப்பல் கவுன்சிலர் தபாசும் மிஸ்ரா தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் முகமது நபி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வேலையின்மை, சீன ஊடுருவல் போன்ற பிரச்சினைகளை ராகுல்காந்தி எழுப்பியதால் பாஜக பயப்படுகிறது – காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம்

கோட்டா முனிசிபல் கார்ப்பரேஷன் தெற்கு, வார்டு எண் 14-ஐச் சேர்ந்த பாஜகவின் கவுன்சிலரான தபசும் மிர்சா, தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா மற்றும் கோட்டா மாவட்டத் தலைவர் கிரிஷன் குமார் சோனி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ராஜினாமா செய்ததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்

கோட்டா மாவட்டத் தலைவர் கிரிஷன் குமார் சோனிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில்  சேர்ந்தேன். தற்போதைய சூழ்நிலையில், கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவது சாத்தியமில்லை என்பதால் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியாவுக்கு எழுதியுள்ள தனி கடிதத்தில், ”நான் கட்சியின் உறுப்பினராக இருப்பதற்கு வருத்தம் அடைகிறேன். நபியை விமர்சிக்கும் கட்சியின் செயல்பாட்டாளர்களை கட்டுப்படுத்த பாஜக தவறிவிட்டது” என்று கூறியுள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

”இவ்வளவு (நபிகளுக்கு எதிராக) நடந்தும் பாஜகவில் தொடர்ந்து உறுப்பினராக இருந்து அதை ஆதரித்தால் என்னை விட பெரிய குற்றவாளி வேறு யாரும் இருக்க முடியாது. இப்போது எனக்குச் சுயநினைவு வந்துள்ளது. என்னால் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது,” என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவருக்கு தபாசும் மிர்சா எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தபாசும் மிஸ்ரா தொடர்பு கொண்டபோது, பாஜகவின் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, கோட்டா மாவட்டத் தலைவர் கிரிஷன் குமார் சோனி ஆகியோருக்கு தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

இது குறித்து கோட்டா மாவட்டத் தலைவர் கிரிஷன் குமார் சோனி கூறும்போது, “கவுன்சிலரிடமிருந்து நான் எந்த ராஜினாமா கடிதத்தையும் மின்னஞ்சலிலோ அல்லது தபால் மூலமோ பெறவில்லை,”என்று கூறியுள்ளார்.

Source: thehindu

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

 

ராஜஸ்தான்: நபிகள் நாயகத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து வெளியேறிய முனிசிபல் கவுன்சிலர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்